சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது பிறந்தநாளன்று மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக முந்தைய அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெயலலிதா திருவுருவச் சிலையினை அதிமுக சார்பில் பாராமரிப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்னாரது திருவுருவச்சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடம் பொதுப்பணித் துறையினரால் சுத்தம் செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் சார்பில் அவரது சிலை மற்றும் நினைவகங்கள் யாவும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய முறையில் பராமரிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விவாகரத்து கிடைக்காத விரக்தி - மனைவிக்கு மாப்பிள்ளை பார்த்த கணவன்