ETV Bharat / state

தோட்டக்கலை, வேளாண் விற்பனை உள்பட பல துறைகள் குறித்து அமைச்சர் ஆய்வு! - வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை தொடர்பாக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

in
in
author img

By

Published : Nov 9, 2020, 11:02 PM IST

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, சர்க்கரைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று (நவ. 09) தலைமைச் செயலகத்தில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக 2020-21ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, “முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் துறை அமைச்சர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.

மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டமான நுண்ணீர்ப் பாசனம், மகத்துவ மையங்கள், தேசிய தோட்டக்கலை இயக்கம், தோட்டக்கலை விளைபொருள்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி சந்தைப்படுத்துதல், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் சர்க்கரைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அமைச்சருக்கு துறைத் தலைவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் எஸ்.ஜெ. சிரு, சர்க்கரைத் துறை ஆணையர் ஆனந்தகுமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் ஆர்.முருகேசன், மற்றும் உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

For All Latest Updates

TAGGED:

Anbalagan
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.