ETV Bharat / state

NEET Issue: 'நீட் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் (NEET Issue) விலக்கு மசோதா குறித்து ஆளுநருடன் உயர் அலுவலர்கள் குழு மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால், விரைவில் நல்ல முடிவு வரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் வாகனத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Nov 18, 2021, 8:46 AM IST

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமிற்கான வாகனங்களை மா. சுப்பிரமணியன் சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பச்சை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், "ஆயிரத்து 560 இந்திய மருத்துவ மையம் மூலம் டெங்கு, வெள்ளம் பாதித்த பகுதிகளில் கபசுரம், நில வேம்பு, மருந்து மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன. சென்னையில் தலா ஒரு வாகனத்தில் மூன்று மருத்துவர்கள் மூலம் 150 மருத்துவர்களைப் பயன்படுத்தி, 50 வாகனங்கள் மூலம் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன.

மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் வாகனத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்த மா. சுப்பிரமணியன்

மருத்துவர்கள் மீது நடவடிக்கை

ஒரு வாகனத்தில் தலா 30 லிட்டர் கபசுரம், நிலவேம்பு குடிநீருடன் தாளிசாதி, ஆடாதொடை உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை சார்பில் மே 7 முதல் கரோனா சிகிச்சை மையம் அமைத்து மருத்துவம் அளிக்கப்படுகிறது. இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இதன்மூலம் குணமடைந்தனர்.

மருத்துவர்களுக்கு தற்போதைய நிலை கடினமான இலக்குதான், வேலை செய்வதில் சிரமம் இருந்தாலும் திருப்தியாக, மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எப்போதுமே வேலையே செய்யாமல் இருக்கும் நான்கைந்து மருத்துவர்கள்தாம், சமூக வலைதளங்களில் கூடுதல் பணிச்சுமை, இலக்குவைத்து வேலை வாங்குவதாக விமர்சிக்கின்றனர். விசாரித்ததில் அவர்கள் வேலையே செய்யாதவர்கள்தான் எனத் தெரியவந்துள்ளது.

இன்னும் ஒரு மாதம் மட்டும் ஆத்மார்த்தமாக வேலை செய்யுமாறு மருத்துவர்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறோம். அதுவரை சக மருத்துவர்கள் செய்யும் வேலையைக் கெடுக்க முனைய வேண்டாம். முறையாக வேலை செய்யாத மருத்துவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது. ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு, ஆணையிடும் அமைச்சர்களாக நாங்கள் இல்லை.

புதிதாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்

கரோனாவின்போது மலை கிராமங்களுக்குக் கூட மருத்துவர், செவிலியருடன் சென்றோம். 15 விழுக்காடு அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான பணிகள் முடிந்த பிறகே மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடத்த முடியும். இரண்டு நாள்களாக ஒன்றிய அரசுடன் மருத்துவ கலந்தாய்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான பணிகள் முடிந்த அடுத்த நொடியே, மருத்துவக் கலந்தாய்வைத் தொடங்கிவிடுவோம். 10.5 விழுக்காடு ஒதுக்கீட்டு வழக்கால் எந்தத் தாமதமும் இல்லை. மருத்துவ காலிப் பணியிடம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. விரைவில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.

இந்திய மருத்துவ மையம் மூலம் 10 நாள்கள் இந்த மருந்து வழங்கும் பணியானது நடைபெறும். தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அறிவிப்பு டிசம்பருக்குள் வெளியாகும்.

நீட் (NEET Issue) விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் இருக்கிறது. ஆளுநருடன் உயர் அலுவலர்கள் குழு மூலம் பேச்சு நடத்திவருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சொல்லாமல் சென்றதற்கு மன்னியுங்கள் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.