ETV Bharat / state

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் - chennai airport

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல். கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கண்டிப்பாக கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By

Published : Aug 1, 2021, 12:14 PM IST

சென்னை : விமான நிலையத்தில் வெளிநாடு, வெளி மாநில விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "லண்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கு ரூ.900 கட்டணம் பெறப்பட்டு 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது.

13 நிமிடங்களில் முடிவு

மேலும் 13 நிமிடங்களில் பரிசோதனை முடிவை அறிவிப்பதற்கான முயற்சி ஓரிரு நாளில் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது".

சென்னையில் அதிகரிக்கும் கரோனா

"சென்னையில் மூன்று நாட்களாக தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆரம்ப நிலையிலேயே தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்".

கரோனா சான்றிதழ் கட்டாயம்

"வரும் 5ந் தேதி அதிகாலை முதல் கேரளாவில் இருந்து வருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு கேரள எல்லையில் வருவாய், காவல் துறை மூலம் பரிசோதனை கண்கணிக்கப்படும்". "இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காட்டி தமிழ்நாடு வரலாம். அவர்களுக்கு கரோனா பரிசோதனை சான்று தேவை இல்லை. கேரளாவிலிருந்து ரெயில், சொந்த வாகனத்தில் வருவோர் அனைவருக்கும் இது பொருந்தும்".

கடைகளுக்கு கட்டுப்பாடு

"முதுகலை மருத்துவ கவுன்சிலிங் பழைய நடைமுறையிலேயே தொடர வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகரில் கரோனா பரவலை கட்டுப்படுத்தவே 9 குறுகலான இடங்களில் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது, அறநிலையத்துறை நடவடிக்கை மூலம் கோயில்களில் கூட்டம் கூடுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது". இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதையும் படிங்க :உஷார் மக்களே - தொடர்ந்து 3ஆவது நாளாக அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.