ETV Bharat / state

'இந்தி பேச விரும்பாத மாநிலங்களில் இந்தி திணிப்பு கூடாது' - அமைச்சர் ஜெயக்குமார் - dmk

சென்னை: "இந்தி பேச விரும்பாத மாநிலங்களில் மத்திய அரசு இந்தியை திணிக்கக் கூடாது" என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார்.

ஜெயகுமார்
author img

By

Published : Jun 3, 2019, 11:23 PM IST

சென்னை நந்தம்பாக்கத்தில் டிரேட் சென்டரில் அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் " சேலம் எட்டுவழிச்சாலை தடை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். விவசாயிகள் நலம் இதில் கண்டிப்பாக பாதுகாக்கப்படும்.

மும்மொழி கொள்கையை பொறுத்தவரை இந்தி பேசுபவர்கள் இந்தியாவில் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் இந்தியை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தி பேச விரும்பாத மாநிலங்களில் இந்தியை திணிக்க கூடாது" என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் :
இஸ்லாம் மக்கள் அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சேலம் எட்டுவழிச்சாலை தடை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும், மேலும் விவசாயிகள் நலம் இதில் கண்டிப்பாக பாதுகாக்கப்படும். 
மொழி கொள்கையை பொறுத்தவரை இந்தி பேசுபவர்கள் இந்தியாவில்  அதிகம் இருக்கிறர்கள் என்பதால்  இந்தியை கொண்டு வர வேண்டும் என்று சொல்வது ஏற்று கொள்ள முடியாது.இந்தி பேச விரும்பாத மாநிலங்களில் இந்தியை திணிக்க கூடாது.  இருமொழிக்கொள்கை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையை அதிமுக அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகின்றது. இருமொழிக்கொள்கை தான் தமிழகத்திற்கு உகந்த ஒன்று. திமுக நடத்துகின்ற பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்க பட்டு வருகிறது. திமுக ஊருக்கு தான் உபதேசம் செய்கிறது. 
மாநிலத்தின் தேவைகள், உரிமைகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரப்படும், அதில் மாற்று கருத்து இல்லை. கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு பாஜகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏன் வர வில்லை என்ற காரணம் தெரியவில்லை. 2021-லும் அதிமுக கண்டிப்பாக ஆட்சி தொடரும், திமுக குறுக்கு வழியில் வர துடிக்கின்றது. 
திமுகவும், தினகரனும் கமலகாசனுக்கு அசைன்மென்ட் குடுத்து இருந்தார்கள். அவர் தேர்தலில் போதிய அளவு வாக்கு சதவீதம் வாங்கிவிட்டு தற்போது அமைதியாக இருக்கிறார். பின்னர் அமைச்சர் ஜெயக்குமாரின் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுகவின் எதிர்காலம் எப்படி பிரகாசமாக இருக்கின்றதோ அதே போல் என்னுடைய எதிர்காலமும் பிரகாசமாக இருக்கின்றது என்று தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.