ETV Bharat / state

சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் - அமைச்சர் எ.வ.வேலு

author img

By

Published : Sep 29, 2021, 5:47 PM IST

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலையை இரண்டு அடுக்குப் பாலமாக அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

நேப்பியர் பாலத்தில் இருந்து கோயம்பேடு வரை 16 கிலோமீட்டர் தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. பறக்கும் சாலையின் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். மேலடுக்கில் துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் அனுமதிக்கப்படும்.

சூடுபிடித்த கிடப்பில் போடப்பட்ட திட்டம்

தற்போது மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி பறக்கும் சாலைகளில் 7 உள்நுழைவுகளும், 6 வெளியேறும் வழிகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 3 மணி நேரமாக உள்ள கண்டெய்னர் லாரிகளின் பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும்.

இது குறித்து அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், “2020இல் பழனிசாமி ஆட்சியில் பறக்கும் சாலை திட்ட மதிப்பீடு ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டதால் பறக்கும் சாலை திட்டத்திற்கான மதிப்பீடு தற்போது மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது.

சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையேயான பிரதான சாலை திட்டப்பணிகள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது. 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பறக்கும் சாலைத் திட்டத்திற்கான வரைபடங்களில் மாற்றம் செய்யும் அரசின் கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்றது. ஆகையால் புதியவரைபடங்களின் அடிப்படையில் பறக்கும் சாலைத் திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” என்றார்.

இதையும் படிங்க: 'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.