முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,"கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் செய்தியை அறிந்த உடன், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
![Minister Cellur Raju confirmed corona infection](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:55:22:1594430722_tn-che-14-sellurrajuminister-7209106_10072020233925_1007f_1594404565_1060.jpg)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.செல்லூர் ராஜூ அவர்கள் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற எனது பிரார்த்தனையையும் அவரிடம் தெரிவித்தேன்" எனப் பதிவில் தெரிவித்துள்ளார்.
![Minister Cellur Raju confirmed corona infection](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:55:21:1594430721_tn-che-14-sellurrajuminister-7209106_10072020233925_1007f_1594404565_48.jpg)
இதையடுத்து, 'கரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக' துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுப் பணியில் ஈடுபடும் அனைவரும் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.