ETV Bharat / state

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை காண உள்ள அரசு பள்ளி மாணவர்கள்-பள்ளி கல்வித் துறை நடவடிக்கை! - அரசுப் பள்ளி

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை காண அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை காண உள்ள அரசு பள்ளி மாணவர்கள்-பள்ளி கல்வித் துறை நடவடிக்கை!

author img

By

Published : Aug 1, 2023, 11:18 AM IST

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றது போல ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை இலவசமாக பார்க்க அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது குறித்து அந்தத் துறை அமைச்சருடன் பேசி ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் இருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட முத்தியால் பேட்டை மேல்நிலைப்பள்ளியில் நேற்று (ஜூலை 31ஆம் தேதி) அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலாவதாக முத்தியால் பேட்டை மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 5 பள்ளிகளை சேர்ந்த 350 மாணவர்களுக்கு 16 லட்சத்து 78 ஆயிரத்து 40 ரூபாய் செலவில் மிதிவண்டிகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பி.கே.சேகர் பாபு வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார். ஆசிரியர் சங்கங்களுடன் 20 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளேன். ஆசிரியர்கள் கருத்துகள் குறித்து நிதி அமைச்சருடன் பேசி இருக்கிறோம். மேலும் நிதி துறையின் செயலரும் பள்ளிக்கல்வி துறை செயலரும் இணைந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றது போல ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை இலவசமாக பார்க்க அரசு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது குறித்து துறை அமைச்சருடன் பேசி ஏற்பாடு செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மாணவர்களின் தகவல்களை எமிஸ் செயலியில் பதிவு செய்ய ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்ற கேள்விக்கு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப செயலி மேம்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சுலபமான வகையில் மேம்படுத்தப்படும். என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட 71 பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் 3,728 மாணவர்கள், 5,019 மாணவியர் என மொத்தம் 8,747 மாணவ, மாணவியருக்கு ரூ.4.22 கோடி மதிப்பில் இன்று விலையில்லா மிதிவண்டிகள் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்.

இதையும் படிங்க: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தாய்ப்பால் புகட்டும் வழிமுறை - மகப்பேறு மருத்துவர் சுஜாதா சங்குமணி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.