ETV Bharat / state

'அறப்போர் இயக்கத்திற்கு' எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடுகோரி தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு தடை! - chennai high court

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த மூன்று வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை

author img

By

Published : Jun 7, 2022, 5:58 PM IST

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்தப்புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பதிவுகள் தொடர்பாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோரின் சார்பில் மானநஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஃபேஸ்புக் பதிவு, ட்விட்டர் பதிவு மற்றும் கூகுள் இணையதளத்தில் உள்ள தகவல் தொடர்பாக தலா ஒரு கோடி ரூபாய் மானநஷ்டஈடு கோரி மூன்று வழக்குகள் தொடரப்பட்டு, அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தனி நீதிபதி முன்பான இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரியும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் தரப்பில், தாங்கள் பதிவிட்ட ஓராண்டிற்குள் வழக்கு தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகள் கழித்து வழக்குத்தொடரப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. ஊழல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவதை இதுபோன்ற வழக்குகள் மூலம் தடுக்க நினைப்பதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடைவிதித்த நீதிபதிகள், வழக்கு குறித்து 6 வாரங்களில் கே.சி.பி. இன்ப்ரா, ஆர்.சந்திரசேகர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: யூ-ட்யூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து - உயர் நீதிமன்றக்கிளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.