ETV Bharat / state

தேர்தல் பரப்புரையில் விதிமீறல்: திமுக எம்எல்ஏவுக்கு செக்?

தென்காசி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார், நிரவி டி.ஆர். பட்டணம் தொகுதி (புதுச்சேரி) திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் ஆகியோர் வெற்றிபெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

congress and dmk candidates election case
திமுக எம்.எல்.ஏ. நாக தியாகராஜன்
author img

By

Published : Jul 19, 2021, 5:25 PM IST

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் எஸ். பழனி நாடார். இதை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், குறிப்பாக அஞ்சல் வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான பதிவான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டுமென கோரியிருந்தார்.

பாஜக வேட்பாளர் வழக்கு

இதைப் போலவே புதுச்சேரியில் நிரவி - டி.ஆர். பட்டணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட என். நாக தியாகராஜனிடம் ஐந்தாயிரத்து 511 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் வி.எம்.சி.எஸ். மனோகரன் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதில், "தேர்தல் பரப்புரைக்கான நேரம் முடிவடைந்த பிறகு வாட்ஸ்அப் காணொலி மூலம் என். நாக தியாகராஜன் பரப்புரைசெய்தார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அதன்மூலம் அவர் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம், தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், காரைக்கால் எம்எல்ஏ நாக தியாகராஜன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவதூறு வழக்கு: ஹெச். ராஜாவின் முன்பிணை மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.