ETV Bharat / state

'கோயில்களுக்கு தானம் வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தாக்கல் செய்க'

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக நான்கு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்களுக்கு தானம் வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தாக்கல் செய்க

author img

By

Published : Aug 4, 2021, 1:48 PM IST

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களை தனி நபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது எனவும், பால் கொடுப்பதை நிறுத்திய இந்தப் பசுக்கள் அடிமாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "தனி நபர்களுக்கு பசுக்களை வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும். 2000ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும்.

கோயில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். கோ சாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை தனி நபர்களுக்கு இலவசமாக வழங்க தடை விதிக்க வேண்டும்.

கோயில்களின் சொத்துகள் அரசின் சொத்துக்கள் அல்ல. கோயில் சொத்துகளை மதம் சார்ந்த விவகாரங்களைத் தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், தானம் வழங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களையும் விரிவான அறிக்கையாக நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஐந்து வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு என்பதே எதார்த்தம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.