ETV Bharat / state

அரசின் சின்னங்கள் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் - நீதிமன்றம் - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய, மாநில அரசின் சின்னங்கள் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க வேண்டுமெனக் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசின் சின்னங்கள்
அரசின் சின்னங்கள்
author img

By

Published : Dec 14, 2021, 4:39 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு தேசிய சின்னங்கள், அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அதைத் தடுப்பதற்கான சட்டவிதிகளைக் காவல் துறை பின்பற்றவில்லை எனவும் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

முகுந்த் சந்த் மறைவிற்குப் பிறகு இந்த வழக்கை அவரது மகன் ககன் சந்த் போத்ரா நடத்திவருகிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், இந்தச் சட்டவிதி மீறல்களைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறை கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவித்ததுடன், வழக்கில் தமிழ்நாடு டிஜிபியை ஐந்தாவது எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இந்த விதிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அல்லது டிஜிபி அலுவலகம் உயர் அலுவலர்களிடமிருந்து விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

காவல் துறைக்கு உத்தரவு

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் புகார் அளிப்பவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

தற்போது பதவியில் உள்ள எம்பிக்கள், அமைச்சர்கள், நீதிபதிகளின் வாகனங்களில் அரசு சின்னங்களைப் பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி ஓய்வுபெற்ற பின்னரும் பயன்படுத்துவதாகவும், அரசின் கடைநிலை ஊழியர்கள் வரை பயன்படுத்துவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அனைவரும் பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ செய்வார்கள் எனக் காவல் துறைக்கு கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து முன்னாள் எம்பிக்கள், அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் தேசிய, மாநில அரசின் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமெனக் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும் இதுபோன்ற செயல்பாடுகள் மீது கான்ஸ்டபிள்கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளைத் தமிழ்நாடு டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.