ETV Bharat / state

Tomato price hike: கோயம்பேடு தக்காளி விற்பனை மைதானம் மீண்டும் திறக்கப்படுகிறதா? - today Tomato price in chennai

கோயம்பேடு சந்தையில் தக்காளி விற்பனை மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க சிஎம்டிஏ, கோயம்பேடு மார்கெட் கமிட்டிக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tomato price hike
Tomato price hike
author img

By

Published : Nov 26, 2021, 6:12 PM IST

சென்னை: கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (நவ.26) நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், 1200 சதுர அடி முதல் 2 ஆயிரத்து 400 சதுர அடி அளவு கொண்ட கடைகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த இடம் உள்ளது, 150 முதல் 600 சதுர அடி வரை மட்டும் இடமுள்ள தங்களை போல சிறிய கடைதாரர்கள் மைதானத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சிஎம்டிஏ தரப்பில் லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளதாகவும், அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, லாரிகள் நிறுத்தக்கூடிய இடத்தில் விற்பனையை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிகள் சரியானது தான் என்ற போதிலும், தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கு அல்லது ஐந்து சிறு வியாபாரிகள் இணைந்து ஒரு லாரியை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பட்சத்தில். அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி சரக்கை இறக்க அனுமதி அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

மேலும் தக்காளி விலை குறையும் வரை ஓரிரு வாரங்களுக்கு லாரிகளை நிறுத்தி கொள்ள அனுமதிப்பது குறித்து சிஎம்டிஏ, கோயம்பேடு மார்கெட் கமிட்டி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (நவ.29) தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: 'International day against Women Violence': முதலமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.