ETV Bharat / state

ஹீராநந்தனி கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான வழக்கு; குடியிருப்போர் சங்கத்திற்கு அபராதம் விதித்து தீர்ப்பு!

author img

By

Published : Jul 9, 2023, 3:30 PM IST

சென்னை ஹீராநந்தனி குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆவணங்களை மறைத்து இடைக்கால தடையை பெற்ற குடியிருப்போர் சங்க உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அபாரதம் விதித்து உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹீராநந்தனி கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான வழக்கு

சென்னை: உயர்நீதிமன்றத்தில் ஹீராநந்தனி குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மும்பையைச் சேர்ந்த ஹீராநந்தினி கட்டுமான நிறுவனம், சிறுசேரி அருகே உள்ள ஏகாட்டூரில் 120 ஏக்கர் நிலத்தில் 2 அலகுகளில் 14 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட ஒப்புதல் பெற்றது. இங்கு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், கிளப் ஹவுஸ் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

முதல் அலகில் 2014 ஆம் ஆண்டு 7 அடுக்குமாடி கோபுரங்களை கட்டி விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் கட்டமாக 7 அடுக்குமாடி கோபுரங்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அங்கு கிளப் ஹவுஸ் கட்டவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 2 கட்டுமான கோபுரங்களை கட்டப்பட உள்ளன. இதற்காக கட்டிட திட்ட அனுமதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நகர ஊரமைப்பு இயக்குநரகம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த கட்டிட திட்டம் மாற்றி அமைக்கும் முன்பு, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளவர்களிடம் தனித்தனியாக அனுமதி பெற்று இருக்க வேண்டும். அதை பெறாததால், கிளப் ஹவுஸ் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி கோபுரங்களை கட்ட தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுக்குமாடி கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இறுதிக் கட்ட விசாரணைக்காக நீதிபதி ஆர்எம்டி டீக்கா ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, “இந்த வழக்கை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தான் விசாரிக்க முடியும். உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று கட்டுமான நிறுவனம் தரப்பு வாதத்தை நிராகரிக்கிறேன். ஒப்பந்தத்தின் அடிப்படையில் வசதிகளை செய்துக் கொடுக்காத பட்சத்தில் தான் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தொடர முடியும்.

அவ்வாறு வழக்கு தொடரும் பட்சத்தில் அந்த ஆணையம், இழப்பீடு வழங்க உத்தரவிட முடியும். ஆனால் இந்த வழக்கு கட்டிட திட்ட அனுமதியை மாற்றியது என்பதால், உயர்நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது. கட்டுமான நிறுவனம் 2 அடுக்குமாடி கோபுரங்கள் கட்டப்படும் இடத்தின் மீது மனுதாரர்களுக்கு சட்டப்படியான உரிமை எதுவும் கிடையாது.

மேலும், கட்டிட திட்ட அனுமதியை மாற்றி, நகர ஊரமைப்பு இயக்குநரகத்தில் கட்டுமான நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்றுள்ளது. பின்னர், இந்த விவரங்களை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்து ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதை மறைத்து மனுதாரர் சங்கம், இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளது. அதனால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குகிறேன்.

வழக்கில் முக்கிய ஆவணங்களை மறைத்து, தடை உத்தரவு பெற்றுள்ளதால், மனுதாரர் சங்கத்திற்கு வழக்கு செலவு விதிக்கிறேன். சங்கத்தில் மொத்தம் 239 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூபாய் 500 வீதம், 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாயை வழக்கு செலவாக (அபராதமாக) விதிக்கிறேன். இந்த தொகையை 8 வாரத்துக்குள் கட்டுமான நிறுவனத்துக்கு அவர்கள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இனி கஞ்சா விற்கமாட்டேன்.. பிரமாணப் பத்திரத்துடன் நிபந்தனை ஜாமீன் பெற்ற குற்றவாளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.