நிவர் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு, கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் வந்துகொண்டிருக்கிறது.
இந்தப் புயல் கடலோர மாவட்டங்களில் கரையைக் கடக்க உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிதீவிர கனமழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் மின்சாரம் துண்டிப்பு