திமுகவின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் உதயசூரியன். ஆனால், இவருக்கு பதிலாக அதே மாவட்டத்தில் திருவெண்ணெய் நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைராஜை அப்பதவியில் நியமிக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திமுக தலைமைக்கு தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். ஆனால், அது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்திற்கு ஸ்டாலின் வந்தபோது, உதயசூரியனை மாற்ற வலியுறுத்தி அக்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இப்பிரச்னை தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி, அய்யனார் ஆகியோரிடம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார்.