ETV Bharat / state

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - ராமதாஸ் - Dam across the Cauvery River

சென்னை: மேகதாது அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. அதுதொடர்பாக மத்திய அரசு கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Meghadau Dam issue  Central Government should take policy decision siad pmk founder Ramadoss

author img

By

Published : Aug 23, 2020, 2:37 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என்று எடியூரப்பா மட்டுமல்ல, கர்நாடகத்திலிருந்து யார் கூறினாலும் அதைக்கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணை கட்டுவதற்கான நிபந்தனைகளைக் காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தெளிவாக வரையறுத்துள்ளன. கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும்தான் காவிரியில் புதிய அணைகளைக் கட்ட முடியும் என்பதுதான் மிகவும் முக்கியமான நிபந்தனை.

மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, அன்புமணி ராமதாஸ்க்கு எழுதிய கடிதத்தில் இதை உறுதி செய்திருக்கிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.5,912 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு, அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்தது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கோரும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

ஒவ்வொரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் கூடும் போதும், அதில் கர்நாடக அரசின் கோரிக்கை குறித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது.

ஏதேனும் ஒரு கூட்டத்தில், தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசின் கோரிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டால், காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயத்தின் நிலை என்னவாகும்.

காவிரி சிக்கலைப் பொறுத்தவரை மத்தியில் ஆளும் அரசுகள் கர்நாடகத்துக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா போன்றோர் மேகதாது அணையை கட்ட முனைப்போடு உள்ளனர்.

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் தரப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.