சென்னை விமான நிலைய சரக்கக பகுதிக்கு நேற்று முன் தினம் இரவு வந்த சரக்கு விமானத்தில் வெளிநாடுகளிலிருந்து 200 பாா்சல்களில் மருத்துவ உபகரணங்கள் வந்தன.
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், சிங்கப்பூா், பின்லாந்து, சீனா, டென்மாா்க், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய 9 நாடுகளிலிருந்து இந்த மருத்துவ உபகரணங்கள் வந்திருந்தன.
அதில், உயிா் காக்கும் சுவாசக்கருவியான வென்டிலேட்டா்கள் தயாரிப்பதற்கான உதிரிப்பாகங்கள், அதி நவீன மருத்துவ உபகரணங்கள், தொ்மா மீட்டா்கள், முகக் கவசங்கள், கையுறைகள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை இருந்தன.
இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய கொரியா் பாா்சல் அலுவலகத்தில் சுங்கத்துறையினா் மருத்துவப் பொருள்களுக்கு முன்னுரிமை அளித்து, உடனடியாக பாா்சல்களை ஆய்வுசெய்து டெலிவரி கொடுத்து அனுப்பினா்.
இதையும் படிங்க:இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்திற்கு பற்றாக்குறையா?