ETV Bharat / state

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பம்

author img

By

Published : Apr 2, 2019, 10:26 PM IST

சென்னை: மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் சுமார் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி மற்றும் மூன்றாண்டுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கான நடைமுறைகளை ஆன்லைன் முறையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. 2018ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 101ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது ஆவணங்களை சரிபார்த்து தொடர் அங்கீகாரம் அளித்து வருகின்றனர்.

சில இடங்களில் தொடர் அங்கீகாரம் அளிப்பதில் புகார்கள் வந்தன. அதுபோன்ற புகார்களை முற்றிலும் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அங்கீகாரம் அளிக்கும் முறையை மெட்ரிகுலேசன் இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த முறையினால் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். பள்ளியின் விண்ணப்பம் தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பம்

Body:சென்னை,
மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் சுமார் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி மற்றும் மூன்றாண்டுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கான நடைமுறைகளை ஆன்லைன் முறையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 101 ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது ஆவணங்களை சரிபார்த்து தொடர் அங்கீகாரம் அளித்து வருகின்றனர்.
சில இடங்களில் தொடர் அங்கீகாரம் அளிப்பதில் புகார்கள் வந்தன. அதுபோன்ற புகார்களை முற்றிலும் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அங்கீகாரம் அளிக்கும் முறையை மெட்ரிகுலேஷன் இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி தமிழகத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை மையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கீகாரம் புதுப்பிக்க மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் விண்ணப்பிக்க தேவையான அனைத்து சான்றுகளுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்ப கட்டணத்தை கருவூலத்தில் செலுத்தி அதற்கான ரசீதையும் இணைக்க வேண்டும்.
மேலும் தேவையான இணைய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் விண்ணப்பித்துள்ள பள்ளியினை ஆய்வு செய்து சான்றுகளில் உண்மைத் தன்மையை சரி பார்க்க வேண்டும்.
சான்றுகளின் உண்மைத்தன்மை மற்றும் அதை செல்லுபடியாகக் கூடிய காலத்தினை சரி பார்த்து ஆய்வு அறிக்கையை உடன் முதன்மைக் கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் அந்தப் பள்ளியின் அங்கீகாரம் விண்ணப்பத்தினை புதுப்பிக்க ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாமா என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்து அதில் குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்ய கோப்புகள் அனுப்புமாறு கேட்கலாம். குறைகள் இல்லாவிட்டால் அங்கீகாரத்திற்கு அனுமதி அளிக்கலாம். இந்த நடைமுறையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பின்பற்ற வேண்டுமென மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த முறையினால் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். பள்ளியின் விண்ணப்பம் தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.