ETV Bharat / state

பண முதலைகளை எதிர்த்து வெற்றிபெறுவோம் - கே. பாலகிருஷ்ணன் நம்பிக்கை

பணம்தான் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்பது கிடையாது, மக்கள் மத்தியில் நம்முடைய பணியே பிரதானம் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்  மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தேர்தல் 2021  கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு  K.Balakrishnan  Marxist Secretary K.Balakrishnan Press Meet  Tamilnadu Election 2021
Marxist Secretary K.Balakrishnan Press Meet
author img

By

Published : Mar 20, 2021, 11:47 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம், திண்டுக்கல், கோவில்பட்டி, தளி உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று (மார்ச் 19) அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பரப்புரை பணிகளுக்கிடையே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஈடிவி பாரத் செய்தியாளரைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் எந்தெந்தத் திட்டங்களுக்கு குரல் எழுப்புவோம் என்பதை மையப்படுத்தி நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

வேலைவாய்ப்பின்மை

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. படித்த இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் உள்ளதனால், வேலைவாய்ப்பை முன்னிறுத்திப் போராடுவோம். குறிப்பாக, அரசுத் துறையில் நான்கரை லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயரில் டாஸ்மாக், போக்குவரத்து, மின்வாரியம், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்கள் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பணி நிரந்தரம் செய்ய குரல் கொடுப்போம்.

புதிய கல்விக் கொள்கை

கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலேயே இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் அலட்சியம்தான் தமிழ்நாட்டிற்குத் தலைவலியாக அமைந்துள்ளது. மக்கள் வாழ்வில் சுகாதாரம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

தொற்று நோய்கள் அதிக அளவில் வருகின்றன. கல்வி என்பது தனியார்மயமாகிவருகிறது. இதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவோம். தமிழ்நட்டிற்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை உருவாக்க ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துவோம்" என்றார்.

கூட்டணிக் கட்சிகள் மாறுபட்ட தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பது எதனால்?

"கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி வேறுபாடுகளே இல்லை என்றால் அனைத்தும் ஒரே கட்சியாகவே இருக்கும். அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இணைந்திருக்கிறோம், எங்களுக்குத் தனித்தனியான கொள்கைகள் கோரிக்கைகள் உள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து குறிப்பிடாதது மிகப்பெரிய வேறுபாடு கிடையாது" என்றார்.

ஈடிவி பாரத் செய்தியாளரைச் சந்தித்துப் பேசும் கே. பாலகிருஷ்ணன்
இந்தியாவின் யதார்த்தம்
தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்துவிட்டு, கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் எதிர்த்து அரசியலில் ஈடுபடுவது ஏன்? இதன் தேவை என்ன? எனக் கேட்டதற்கு, "இதுதான் இந்தியாவின் யதார்த்தம். மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் சூழ்நிலை வேறுபடுகிறது. அதிமுக மேற்குவங்கத்தில் கிடையாது, திருணமூல் காங்கிரஸ் இங்கு கிடையாது. மாநிலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப அரசியலும் வேறுபடுவது தவறு இல்லை. அடிப்படை நோக்கம் பாஜக அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்துப் போராடுவது என்பதே" எனப் பதிலளித்தார்.

பணபலம் கொண்ட வேட்பாளர்களை வெற்றிபெற முடியும் என நம்புகிறீர்களா?

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எளிமையான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளது பாராட்டப்பட்டாலும், பணபலம் கொண்ட வேட்பாளர்கள் வெற்றிபெற முடியும் என நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு, "வேட்பாளர்கள் தேர்தலுக்காக தங்கள் சொந்த பணத்தை செலவு செய்யக் கூடாது என்ற கொள்கை உடையவர்கள் நாங்கள்.

வேட்பாளருக்கான அனைத்துச் செலவுகளையும் கட்சியே ஏற்கும். அதேபோல, வேட்பாளர்கள் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருடைய ஊதியத்தை கட்சி பெறும். கடந்தகால தேர்தல்களில் நாங்கள் பண முதலைகளை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறோம். பணம்தான் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்பது கிடையாது. மக்கள் மத்தியில் நம்முடைய பணியே பிரதானம்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கையில் வில், அம்பு.. கழுத்தில் நூல்கண்டு மாலை.. வேட்புமனு தாக்கல் செய்த சிவசேனா வேட்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.