ETV Bharat / state

முன்விரோதம்: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை

சென்னை: மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி
கோபி
author img

By

Published : Sep 16, 2021, 9:12 AM IST

சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர் அதேபகுதியில் ஆவின் பார்லர் வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி இரவு வழக்கம் போல் ஆவின் பார்லரில் இருந்துள்ளார். அப்போது இரண்டு வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கோபியை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் கோபி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வந்த மயிலாப்பூர் காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபி கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.

மேலும் முதற்கட்ட விசாரணையில் கோபியும், ரவுடி மயில் சரவணனும் நண்பர்கள் எனவும், யார் பெரியவர் என்ற மோதலில் முன்விரோதம் காரணமாக ரவுடி கிழங்கு சரவணன், அழகு இணைந்து கோபியை கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகப்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.