தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக 44 விழுக்காடு வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்றும், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படும் பட்சத்தில் 60 விழுக்காடு அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இந்த நிலையில் சென்னை ஐஐடியில் செயல்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் இயங்கிவரக்கூடிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எத்தகைய பாதிப்புகளைச் சந்தித்துள்ளன, அந்நிறுவனங்கள் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு ஏற்ற நீண்ட மற்றும் குறுகிய கால திட்டங்களை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு சிறு, குறு தொழில் மையம், கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இயங்கிவரும் சிறு தொழில் கூட்டமைப்புகளோடு இணைந்து ஆய்வு மேற்கொள்ளபட்டுள்ள நிலையில், நான்கு வாரங்களில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சென்னை ஐஐடியில் வேலைசெய்யும் கட்டட தொழிலாளர்கள் ஊதியமின்றி தவிப்பு