சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்'. இத்திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் கரோனா பரவல் காரணமாக இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகக் கூறப்பட்டது.
அதை உறுதி செய்யும்விதமாக, வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று (ஜன. 31) இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!