சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு ஏா் இந்தியாவின் அலையன்ஸ் ஏா் விமான நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறு விமானங்களை இயக்கிவந்தது. ஆறு விமானங்களும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், இன்றிலிருந்து நவம்பா் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது பயணிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஏா் இந்தியா அலுவலர்கள், ''விமானங்களின் பற்றாகுறை காரணமாக, போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டுவந்த விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கக்கூடிய மற்ற வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
அலையன்ஸ் ஏா் நிறுவனத்தால் சென்னையிலிருந்து யாழ்ப்பானத்திற்கு (ஜாப்னா) இயக்கப்படும் விமானம் வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து இயக்கப்படும்'' என்றனர்.
இதையும் படிங்க: இண்டிகோ, கத்தார் ஏர்வேஸ் இடையே குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தம்!