சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த அக்.21ஆம் தேதி தொடங்கப்பட்டது. 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் மாணவர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல தரப்பினரிடம் கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்பிக்கப்பட உள்ளதாகக் கூறி "இன்று நீட் விலக்கு நமது இலக்கு” என்ற பெயரில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இந்த கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திடுமாறு பள்ளி மாணவர்கள் வற்புறுத்தப்படுவதாகவும், இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த கையெழுத்து இயக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும் என தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்.
இதனை ஏற்க மறுத்த பரத சக்கரவர்த்தி, லக்ஷ்மி நாராயணன் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, தலைமை நீதிபதி கங்கபூர்வாலா அமர்வில் முறையிடுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:ஆசிய பாரா விளையாட்டு; பதக்கப் பட்டியலில் முன்னேறும் இந்தியா.. ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தல்!