தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நேற்று நடைபெற்றது.
இந்த சமரச தீர்வு மையத்தில் மொத்தம், 521 அமர்வுகளில் நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 817 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 71 ஆயிரத்து 401 வழக்குகளும் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், தமிழகம் முழுவதும் ரூ.397 கோடியே 60 லட்சத்து 59 ஆயிரத்து 218 மதிப்பிலான 50 ஆயிரத்து 266 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இந்தத் தகவலை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகள் உள்பட மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 467 அமர்வுகளில் விபத்து, காசோலை மோசடி, தொழிலாளர்கள், மின்சாரம், போக்குவரத்து, அரசு பணியாளர்கள் ஊதியம் தொடர்பானவை என 17 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : நிதி நிறுவனத்தில் நகைகளை திருடிய அலுவலர்கள் - இருவர் கைது, ஒருவர் தலைமறைவு