தமிழகத்தில் கட்டுமானத் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் நலிவடைந்த 5 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்காக 1 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி முகாமில் தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதில் பணி நேரத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உற்பத்தித்திறன் மேம்பாடு, கட்டுமானத் தொழிலில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை மையமாக கொண்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதையும் படிங்க:
"கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விரைவில் பாதுகாப்பு உபகரணங்கள்"- தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்