இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. கிருஷ்ணரின் பிறந்தநாளை மையமாக வைத்து பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர், ஈரோடு, விருதுநகர், சேலம், திருப்பூர், தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள குலாலர் ஸ்ரீ நடராஜர் திருமண மண்டபத்தில், கோலாகலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், பட்டுக்கோட்டையிலும் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. மேலும், விருதுநகரில் குழந்தைகளை கிருஷ்ணரைப் போல அலங்காரம் செய்து கிருஷ்ண ஜெயந்தியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.