150 நாட்களுக்கும் மேலாக பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதால், பேருந்துகள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச்சூழ்நிலையில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்தத் தீ அருகிலிருந்த பேருந்துகளுக்கும் பரவத்தொடங்கியது.
இந்த தீ விபத்து குறித்து அறிந்து கோயம்பேடு, திருமங்கலம், அம்பத்தூர், எழும்பூர் ஆகியப் பகுதிகளில் இருந்து, 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. ஆம்னி பேருந்து நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியிருந்ததால், தீயானது குடியிருப்புப் பகுதிக்கும் பரவியது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும், மூன்று பேருந்துகளும், குடியிருப்புப் பகுதியின் ஒரு பக்கச் சுவரும் நெருப்புக்கு இரையாகின. தீயணைப்புத் துறையினர் அதிவேகமாக செயல்பட்டதால், தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: மூடிக்கிடந்த சலூனில் தீ - காவல்துறை விசாரணை