ETV Bharat / state

ஆமை வேகத்தில் நடைபெறுகிறதா கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள்? என்ன காரணம் ?

சென்னையில் கடந்த நவம்பர் மாதம் பெருமழை வெள்ளம் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பேருந்து நிலைய திறப்பு விழாவிற்கு முதலமைச்சரை அழைக்க உள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 11, 2023, 7:05 AM IST

சென்னை: சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கோயம்பேடு அடுத்தபடியாக மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2019ஆம் ஆண்டு 397.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.

ஆமை வேகத்தில் நடைபெறும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள்… காரணம் என்ன?

அதன் பின்பு கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பணிகளும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடங்கி போயிருந்தன. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்த புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட அதிக சிறப்பம்சங்களுடன் நவீனமயமாக கட்டப்பட்டு வருகிறது. 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்துகள், மாநகர பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துக்கள் தனித்தனியே நிறுத்தமிடத்துடன் உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சுமார் மூன்று ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விரைவில் கட்டி முடித்து சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டது. ஆனால் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு, அப்போதைய சிஎம்டிஏ அமைச்சராக இருந்த முத்துசாமி நேரடியாக பணிகளை ஆய்வு செய்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் 82 சதவீதம் முடிந்து விட்டதாகவும், 2023 பொங்கலுக்கு பயன்பாடுக்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடையாமல் பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டதன் பெயரில் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் போது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் பாதிப்படைந்து தொய்வு ஏற்பட்டது.

எனவே இந்த ஆண்டு பொங்கல் நேரத்தில் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறிய நிலையில் கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக திறக்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

அதன் பின்பு கடந்த டிசம்பர் மாதம் சி.எம்.டி.ஏ அமைச்சராக பொறுப்பேற்ற பி.சேகர்பாபு, கடந்த ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக சென்று பணிகளை ஆய்வு செய்து விரைவாக முடிக்க உத்தரவிட்டார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடைமேடை கட்ட நிலம் கையகப்படுத்த பணியில் சி.எம்.டி.ஏ ஈடுபட்டுள்ளது.

இது குறித்து கூறிய சி.எம்.டி.ஏ அதிகாரி ஒருவர் பேசுகையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டவுடன் நடைமேடை மற்றும் மேம்பாலம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிர்புரமாக மெட்ரோ மற்றும் மின்சார நிலையங்கள் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்திருந்த நிலையில் சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு கேளம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை நேற்று (மார்ச்11) நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம். மாதத்திற்கு ஆறு முறை இது சம்பந்தமான ஆய்வு கூட்டங்களை துறையின் செயலாளர் முழு வேகத்தோடு நடத்திக் கொண்டு, எந்த பணிகளில் தொய்வு இருக்கின்றதோ அங்கெல்லாம் பணிகளை விரைவு படுத்துவதற்கும், அதற்கு உண்டான தேவைகளை நிறைவுப் படுத்துவதற்கும் முழு வீச்சில் பணிகள் நடக்கின்றன.

வெகு விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பணிகள் நிறைவு பெற்றவுடன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரையே திறப்பு விழாவிற்கு அழைக்க உள்ளோம். எவ்வளவு விரைவாக முடியுமோ நாலுகால் பாய்ச்சலில் இந்த பணிகளின் வேகத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு கொண்டிருக்கிறோம்.

கடந்த ஜனவரி மாதமே பொங்கலுக்கு திறப்பதாக சொல்லி இருந்தார்கள். இடையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பணிகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்த முறை அதிக நாட்கள் எடுத்து கொள்ளாமல் விரைந்து பணிகளை முடிப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து.. காரணம் என்ன.?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.