ETV Bharat / state

சென்னையில் கடத்தப்பட்ட சிறுமி 6 மணி நேரத்தில் மீட்பு

author img

By

Published : Jul 19, 2019, 10:51 AM IST

Updated : Jul 19, 2019, 3:26 PM IST

சென்னை: அமைந்தக்கரை செல்லம்மாள் தெருவில் வீட்டில் பணிபுரிந்த பெண்ணால் கடத்தப்பட்ட மூன்றரை வயது சிறுமியை, தனிப்படை போலீசார் ஆறு மணிநேரத்தில் மீட்டனர்.

குழந்தையை கடத்திய பணிப்பெண் அம்பிகா

சென்னை அமைந்தக்கரை செல்லம்மாள் தெரு பகுதியில் அருள்ராஜ் - நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். நந்தினி தனியார் மருத்துவமனையில், மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தையை பள்ளியில் கொண்டு செல்வதற்கும், பள்ளி முடிந்து வீட்டிற்க்கு அழைத்து வருவதற்கும் அம்பிகா(29) என்ற பெண்ணை வேலையில் அமர்த்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த பின், வெகு நேரமாகியும் குழந்தை வரவில்லை என அமைந்தகரை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

அப்போது, பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் கூறினர். இதனையடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக ஆபரேஷனை கண்காணிக்க, அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி, தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது நந்தினியின் செல்போன் எண்ணிற்கு பேசிய மர்ம நபர் ஒருவர், குழந்தை என்னிடம் தான் உள்ளது. குழந்தை உயிருடன் வேண்டுமென்றால் 60 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.

பின்னர் அதில் வந்த செல்போன் எண்ணை தீவிரமாக ட்ராக் செய்தபோது, அந்த எண் செங்குன்றம் பகுதியில் இயங்கியது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அந்த மர்ம நபரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் முகமது கலிமுல்லா ஷேக் என்பதும், புழல் பகுதியில் கறிக்கடையில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், இவர் பணிப்பெண் அம்பிகாவின் காதலர் என்றும் அம்பிகாவின் உதவியுடனே குழந்தை கடத்தப்பட்டுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Kidnap  அமைந்தக்கரை குழந்தை கடத்தல்  school girl kidnapped in chennai  school girl kidnapped by maid
குழந்தையை கடத்திய பணிப்பெண் அம்பிகா

கடத்திய குழந்தை எங்கே என விசாரித்தபோது, குழந்தையுடன் அம்பிகா கோவளத்தில் பதுங்கி இருப்பதாக கூறினார். பின்னர் அங்கு விரைந்த தனிப்படையினர், பணிப்பெண் அம்பிகாவை கைது செய்து குழந்தையை மீட்டனர். குழந்தை கடத்தப்பட்டு ஆறு மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறையினருக்கு. பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

Intro:Body:அமைந்தகரையில் காணாமல் போன குழந்தையை பத்து மணி நேரத்தில் மீட்ட காவல்துறை.
பணிப்பெண் உட்பட அவரது காதலன் கைது.

சென்னை அமைந்தக்கரை செனாய் நகர் செல்லம்மாள் தெரு பகுதியில் வசித்து வருபவர் அருள்ராஜ் இவரது மனைவி நந்தினி இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.இந்தக் குழந்தை சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறது.இதற்காக குழந்தையை அழைத்துச் செல்ல அம்பிகா வயது 29 என்ற பணிப்பெண்ணை நியமித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்தபின் பல மணி நேரமாக குழந்தை மற்றும் பெண் பணியாளரை காணவில்லை என அமைந்தகரை காவல் நிலையத்தில் அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

மேலும் இதில் பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர் இதனை அடுத்து அமைந்தகரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.அப்போது மர்ம நபர் ஒருவர் நந்தினியின் செல்போனிற்கு கால் செய்து அதில் பேசிய மர்ம நபர் பனிப் பெண்ணும் குழந்தையும் என்னிடம் தான் உள்ளது எனவும் உயிருடன் வர வேண்டுமென்றால் 60 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறி போனை துண்டித்து விட்டனர். பின்னர் அதில் வந்த செல்போன் எண்ணை தீவிரமாக ட்ராக் செய்தனர். அந்த செல்போன் எண் செங்குன்றம் பகுதியை காண்பித்தது உடனே அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அந்த மர்ம நபரை கைது செய்தனர் பின்னர் விசாரணையில் முகமது கலிமுல்லா ஷேக் என்பதும் இவர் புழல் பகுதியில் கறிக்கடையில் மேலாளராக இருந்து வருவதும் தெரியவந்தது மேலும் விசாரணையில் பணிப்பெண்ணின் காதலன் என்பதும் குழந்தையை கடத்தியதும் இவர்தான் என்பது தெரியவந்தது இதற்கு மூல காரணமாக இருந்து செயல்பட்டது பணிப்பெண் அம்பிகா என்பதும் அம்பலமாகியுள்ளது இதனைத் தொடர்ந்து கடத்திய குழந்தை எங்கே என விசாரித்தபோது அம்பிகா கடத்திய உடன் கோவளத்தில் பதுங்கி இருப்பதாகவும் அவர் கூறினார் பின்னர் அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் அம்பிகாவையும் குழந்தையும் மீட்டனர்.மேலும் குழந்தையை கடத்திய 10மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.பின்னர் 2பேரையும் போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:
Last Updated : Jul 19, 2019, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.