ETV Bharat / state

'கரோனா நிவாரண நிதியாக திரைப்பட நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.74 லட்சம் வழங்கல்'

சென்னை: திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கரோனா நிவாரண நிதியுதவியாக 74 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்ததை அரசின் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

raju
raju
author img

By

Published : Apr 24, 2020, 10:42 AM IST

திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 39 சங்கங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் சிரமமின்றி வாழ்வதற்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது.

கரோனா தொற்றால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள திரைப்படத் துறையினர் நலவாரிய உறுப்பினர்கள் 21 ஆயிரத்து 679 பேருக்கு முதலமைச்சர் பழனிசாமி ஏப்ரல் 9ஆம் தேதி கரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.1000 வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி ஏப்ரல் 13ஆம் தேதி இரண்டு கோடியே 16 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அரசு, "தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம், டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் & டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் உள்பட 39 சங்கங்களில் 21 ஆயிரத்து 679 நபர்களில் இன்றைய தினம்வரை 7,489 உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் 74 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை திரைப்படத் துறையினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு கரோனா நிவாரண நிதி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் திரைப்படத் துறையினர் நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவுசெய்து கரோனா நிவாரண நிதி கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் சங்கத்தின் வாயிலாகவோ அல்லது திரைப்படத் துறையினர் நலவாரியம் அலுவலகத்தைத் தொடர்புகொண்டோ cinewelfare@gmail.com என்ற மின் அஞ்சல் மூலம் திரைப்படத் துறையினர் நலவாரிய உறுப்பினர் பதிவு எண், வங்கிக் கணக்கு புத்தகத்தில் உள்ளவாறு வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், IFSC குறியீடு எண் ஆகியவற்றை அனுப்பி கரோனா நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளும்மாறு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.