ETV Bharat / state

போலி செய்தியாளர்கள் குறித்த வழக்கு - பிப்., 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - fake journalist case

சென்னை: போலி செய்தியாளர்கள் குறித்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி செய்தியாளர் வழக்கு  சென்னை உயர் நீதிமன்றம்  போலி செய்தியாளர்கள் வழக்கு விசாரணை  fake journalist case  fake journalist
high court
author img

By

Published : Feb 6, 2020, 11:33 AM IST

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக பணியாற்றியபோது பொன். மாணிக்கவேல், தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சேகாரம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதில் தன்னைச் செய்தியாளர் என்று சேகாரம் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, அவரது அடையாள அட்டை குறித்து கேள்வி எழுப்பி, உண்மையான செய்தியாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் எத்தனைச் செய்தியாளர் சங்கங்கள் உள்ளன என, அரசுதரப்பு வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இவர்கள் சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தி உண்மையான செய்தியாளர்களை நுழைய அனுமதிப்பதில்லை என்றும் நீதிபதிகள், செய்தியாளர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் மிரட்டி பணம் சம்பாதிக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

அப்போது, காவல் துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், தமிழ்நாட்டில் 204 செய்தியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்ரகளைச் சமர்பித்தார்.

இதையடுத்து போலி செய்தியாளர்களை களைய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்திய அரசின், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதாகக் கூறப்படும் அகில இந்திய ஊழல் தடுப்பு பத்திரிகை என்ற அமைப்பு குறித்து விசாரித்து குற்ற நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கில் செய்தித்தாள் பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு அரசியல் புரிதல் இல்லை - உதயநிதி ஸ்டாலின்

Intro:Body:தமிழகத்தில் போலி பத்திரிக்கையாளர்களை களையெடுத்த பின்னர், உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய போது, பொன் மாணிக்கவேல், தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகராம் பத்திரிகையாளர் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, அவரது அடையாள அட்டை குறித்து கேள்வி எழுப்பி, உண்மையான பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்களை அறிக்கையாக அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னையிலும், தமிழகத்திலும் எத்தனை பத்திரிகையாளர்கள் சங்கங்கள் உள்ளன என, அரசுத்தரப்பு வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த பத்திரிகையாளர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஆதிக்கத்தை செலுத்தி, உண்மையான பத்திரிகையாளர்களை நுழைய அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் மிரட்டி பணம் சம்பாதிக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

காவல் துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், தமிழகத்தில் 204 பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை சமர்ப்பித்தார். மேலும், தமிழகத்தில் போலி பத்திரிக்கையாளர்களை களையெடுத்த பின்னர், உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

இதையடுத்து, போலி பத்திரிகையாளர்களை களைய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், உண்மையான பத்திரிகையாளர்களை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பின்னர், இந்திய அரசின், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதாகக் கூறப்படும் அகில இந்திய ஊழல் தடுப்பு பத்திரிகை என்ற அமைப்பு குறித்து விசாரித்து குற்ற நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் செய்தித்தாள் பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.