சென்னை: தமிழ்நாடு அரசுத் துறை செயல்பாடுகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி, தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் அறிக்கை கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்த இறையன்பு, தான் துறைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் வழக்கமானதே. புதிய ஆளுநர் பதவியேற்ற பிறகு அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு கோருவது இயல்பானதே.
இந்தக் கடிதம் தேவையில்லாமல் விவாதப் பொருளாகி விட்டதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இது குறித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தமிழ்நாட்டின் நலனில் அவ்வளவு அக்கறையுள்ள ஆளுநர் ஏன் #பாலியல்பாஜக தலைவர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க, பாஜகவின் 15 பாலியல்குற்ற வீடியோக்களைப் பற்றி தெரிந்துகொள்ளக்கூடாது. ஆளுநர் அவருடைய எல்லையைத் தாண்டுவது தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் வழக்கு: ஆர்யன் கானுக்கு ஜாமீன்