ETV Bharat / state

"அதிமுக கட்சிக்கும் ஓபிஎஸ்-க்கும் சம்பந்தம் இல்லை"- ஜெயக்குமார் விமர்சனம் - பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் "ஓ.பன்னீர்செல்வம் கூட்டும் கூட்டத்தைக் கட்சி கூட்டமாக நாங்கள் பார்க்கவில்லை" எனவும் அதிமுக கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வெறும் முழங்கையால் எடை போடுபவர். விலை மோரில் வெண்ணெய் கடைகின்ற வித்தை தெரிந்தவர் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

"ஓபிஎஸ் தலைமையிலான கூட்டம் கட்சி கூட்டமாக பார்க்கவில்லை"- ஜெயக்குமார் விமர்சனம்

author img

By

Published : Dec 21, 2022, 9:59 PM IST

"ஓபிஎஸ் தலைமையிலான கூட்டம் கட்சி கூட்டமாக பார்க்கவில்லை"- ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், “அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டும் கூட்டத்தைக் கட்சி கூட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. அது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி. அதாவது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி. அந்த கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டத்தில் ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள்.

எனவே அவரின் செயல்பாடுகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது. அந்த கூட்டத்தில் எந்த அதிமுக தொண்டரும் கிடையாது. உண்மையான அதிமுக கட்சி தொண்டர்கள் நாங்கதான்” என்றார். ஈபிஎஸ் மன்னிப்பு கடிதம் அளித்தால் சேர்ந்து கொள்வோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளது குறித்து பேசிய அவர், "அவரை நான் மிகவும் மதிக்கிறேன். மூத்தவர் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன்.

ஆனால் அவர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு நல்ல மரியாதை உள்ளது. அதனை அவர் கெடுத்து கொள்ளக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல அந்த கூடா நட்பைத் தவிர்ப்பது நல்லது. இது என்னுடைய ஆலோசனை" என கூறினார்.

இதையும் படிங்க:எங்கு பொறி வைத்தால், எந்த எலி வரும் என்று எங்களுக்குத் தெரியும்: அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.