ETV Bharat / state

அதிமுக தலைமையகத்தில் களைகட்டிய ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்!

author img

By

Published : Feb 24, 2020, 11:29 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா, அதிமுக தலைமைக் கழகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அதிமுக தலைமையகத்தில் களைக்கட்டிய ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா, சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக தலைமையகத்தில் களைகட்டிய ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்!

பின்னர் கழகக் கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பிறந்தநாள் சிறப்பு மலரையும் வெளியிட்டு, 72 கிலோ எடையுடைய கேக்கை வெட்டினார். மேலும் மருத்துவ முகாம், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...இந்தியாவுடன் 300 கோடி டாலர் ராணுவ ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.