தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ். இவர் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்திவருகிறார். இவரது வீடு பெரம்பூர் சிறுவள்ளூர் சாலை பகுதியில் உள்ளது.
நேற்று (மார்ச் 24) இரவு பிரகாஷ் வீட்டில் வருமானவரித் துறை அலுவலர்கள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அப்போது, வெளியாள்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. பிரகாஷ் நடத்தும் மென்பொருள் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வுசெய்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் மூன்று மணி நேரம் வீட்டில் சோதனை நடத்தினர். இரண்டு பைகளில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி கொண்டுசென்றதாக வருமானவரித் துறை அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக எந்தத் தகவலையும் தெரிவிக்க அலுவலர்கள் மறுத்துவிட்டனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கண்ணையாவின் ஆதரவாளர்கள் சிலர் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் இந்த வருமானவரித் துறை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் கந்துவட்டி கொடுமையால் கூலி தொழிலாளி தற்கொலை