ETV Bharat / state

'10.5% உள் ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ் காரணமல்ல' - வேல்முருகன் குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்! - சி.என்.ராமமூர்த்தி

சென்னை: 'வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கிடைப்பதற்கு  ராமதாஸ் காரணம் எனக் கூறுவது முற்றிலும் தவறானது' என்று குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இதற்கு யார் காரணம் என்பதையும் குறிப்பிட்டார்.

10.5% உள் ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ் காரணமல்ல

author img

By

Published : Mar 6, 2021, 6:38 PM IST

Updated : Mar 7, 2021, 3:19 PM IST

பாமகவின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (மார்ச் 5) நடந்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் மட்டும் அவரவர் வீடுகளிலிருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்க, கட்சித் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என். ராமமூர்த்தி, தான் தொடுத்த வழக்கு மூலமாகத்தான் வன்னியர் உள் இடஒதுக்கீடு கிடைத்ததாக கூறுகிறாரே என செய்தியாளர் ஒருவர் ராமதாஸிடம் கேட்டார்.

நாயும், வெட்கமும்

அதற்கு அவர், ”ஏதோவொரு நாயைப் பற்றியும், அது கூறுவதைப் பற்றியும் இங்கு வந்து பேசுகிறாயே! உனக்கு வெட்கமாயில்லை. இந்தத் தேர்தல் முடியட்டும், அப்புறம் பாரு” என்றார்.

'10.5% உள் ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ் காரணமல்ல'

ராமதாஸின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களிலும் பரவிவரும் நிலையில், அவருக்குப் பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என். ராமமூர்த்தி, மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் தங்கை மீனாட்சி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

10.5% காரணம் இவர்தான்!

அப்போது பேசிய வேல்முருகன், "வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கிடைத்ததற்கு சி.என். ராமமூர்த்திதான் காரணம். வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என். ராமமூர்த்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் தகாத வார்த்தைகளால் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

10.5% காரணம் இவர்தான்!
10.5% காரணம் இவர்தான்!

2010இல் வன்னியர்களுக்கு 15 விழுக்காடு உள்ஒதுக்கீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் சி.என். ராமமூர்த்தி. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (எம்.பி.சி.) உள்ஒதுக்கீடு குறித்து 2012இல் ஜனார்த்தனன் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

15%இல் நியாயம் இருக்கிறது

2013இல் சஞ்சய் கிஷன் கவுல் (அப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர், இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர்) ஒரு மாதத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டும் அரசு பதிலளிக்கவில்லை.

15%இல் நியாயம் இருக்கிறது
15%இல் நியாயம் இருக்கிறது
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு கிடைக்க ராமதாஸ்தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இட ஒதுக்கீடு தொடர்பாக உண்மைக்குப் புறம்பாகப் பரப்பிவருகின்றனர், பத்திரிகையாளர்களை நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது.
வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு வரலாறு
வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு வரலாறு

1976 முதல் பெரும்தலைவர் ராமசாமி படையாட்சி உடன் இணைந்து எந்தவித பிரதிபலன் பார்க்காமல் போராடிவருபவர். 15 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி போராடியபோது, அன்றே நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது, உடனே பரிசீலித்து உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நாடகம்

நாடகம்
நாடகம்

திமுக, அதிமுக உடன் மாறி மாறி கூட்டணி வைத்தபோது ராமதாஸ் பேசி இருப்பாரா, இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வாக்கு அறுவடை செய்வதற்கான நாடகம் இது, வன்னியர்களுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் இட ஒதுக்கீடு உரிமை முறையாகச் செயல்படுத்தப்படும்.

சாதி பகைமை

சாதி பகைமை உண்டாக்கும் வேலையில் ராமதாஸ் ஈடுபட்டுள்ளார். எங்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்வருகிறது. எந்த மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன். ராமதாஸ், அன்புமணிக்கு இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு பங்கும் கிடையாது" எனப் பேசினார்.

வேல்முருகன் குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்

அதன்பின் பேசிய வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என். ராமமூர்த்தி, "ராமதாஸ் மிரட்டும் வேலையைச் செய்துவருகிறார், மிரட்டிதான் கட்சியில் அனைவரையும் இணைத்துள்ளனர்.

எங்கள் பிள்ளைக்கு அவர் இன்ஷியல்

எங்கள் பிள்ளைக்கு அவர் இன்ஷியல்
எங்கள் பிள்ளைக்கு அவர் இன்ஷியல்

நாங்கள் பெற்ற பிள்ளைக்கு அவர் இன்ஷியல் போட்டுக் கொள்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்குப் போராடியது யார் எனத் தெரியும், பாமக தன்னாலே தேர்தலில் வீழும், தேர்தலில் வன்னியர்கள் ஆதரவு தொடர்பாக கூட்டமைப்பு சார்பில் பேசி முடிவெடுப்போம்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: '10.5% உள் ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ் காரணமல்ல' - வேல்முருகன் குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்!

Last Updated : Mar 7, 2021, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.