ETV Bharat / state

7.5%இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடைகோரிய வழக்கு - தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்

author img

By

Published : Dec 15, 2020, 12:00 PM IST

Updated : Dec 15, 2020, 12:27 PM IST

7.5%இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடைகோரிய வழக்கு - தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்
7.5%இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடைகோரிய வழக்கு - தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்

11:52 December 15

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கி கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கி, தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம், இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப்படிப்பில் 405 அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி, இந்தாண்டு  3ஆவது முயற்சியாக நீட் தேர்வு எழுதி 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததையடுத்து 7.5% இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து பூஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று(டிச.15) நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ். ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 7.5% இட ஒதுக்கீடு காரணமாகவே, அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் தனக்கு மருத்துவப்படிப்பு படிக்க இடம் கிடைக்காமல் போனதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள்கூட தாண்டாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 7.5% இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த மனுதாரர் தரப்பு, இந்த வழக்கு முடியும் வரை 7.5% இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை இறுதி செய்யக்கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், தற்போது அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதால் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். 

அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால்தான், மாணவர்களுக்கு இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாகப் பார்க்க வேண்டுமே தவிர, எதிரியாக பார்க்கக்கூடாது எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5% இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்து விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

இதையும் படிங்க: விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

Last Updated : Dec 15, 2020, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.