ETV Bharat / state

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் : அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

author img

By

Published : Mar 31, 2022, 7:14 AM IST

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்Intensity of 10th AND 11th AND 12th class PUBLIC examination arrangements
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் Intensity of 10th AND 11th AND 12th class PUBLIC examination arrangements

சென்னை: மே முதல் வாரத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு , 11 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், மே 4ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண் விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டுமென தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவிட்டுள்ளார்.

அன்பில் மகேஷ் ஆலோசனை: இதனிடையே, ஏப்ரல் 4, 5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எழுதப்படாத வெள்ளை விடைத்தாள்களை, அனைத்து தேர்வு மையங்களுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 9ஆம் தேதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

பொது தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்
பொது தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்

மேலும், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களுக்கான விடைத்தாள்களின் பின் பக்கத்தில், தேவையான வரைபடங்களை இணைத்து விடைத்தாளை தைக்க வேண்டும் எனவும், தேர்வுக்கான எழுது பொருட்களையும் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் கொண்டு சேர்த்து விட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். பொதுத் தேர்வை எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் நடத்துவதற்கு அரசுத் தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை
அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

இதையும் படிங்க: போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதலமைச்சரை சந்தித்த எஸ்.எஸ்.சிவசங்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.