ETV Bharat / state

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் - தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு - sathiyamoorthy bhavan

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் - தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

author img

By

Published : Oct 17, 2022, 1:39 PM IST

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் இன்று (அக் 17) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ‘பாரத் ஜோடா யாத்ரா’ நடைபெற்று வருவதால், இந்த யாத்திரை நடைபெறும் கர்நாடகாவின் பல்லாரியில் மட்டும் வாகனம் ஒன்று வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

யாத்திரை நடைபெறும் கர்நாடகாவின் பல்லாரியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் ராகுல் காந்தி

இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களிக்கின்றனர். மேலும் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நாடு முழுவதும் வாக்களித்து வருகின்றனர். இந்த வகையில், தமிழ்நாட்டின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உள்ள கூட்ட அரங்கில், வாக்குப்பெட்டிகள் வைப்பதற்காக நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து நான்கு வாக்குப் பெட்டிகளும், ஒரு பெட்டிக்கு 200 வாக்குச்சீட்டுகள் வீதம் 800 வாக்குச்சீட்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அலுவலர்கள் நெய்யாற்றின்கரை சனல், கர்நாடகாவைச் சேர்ந்த அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் திறந்து காண்பிக்கப்பட்டு, பின்பு மூடப்பட்டு தேர்தலுக்காக வைக்கப்பட்டது. வாக்களிக்க தகுதி பெற்றவர்கள், ஒரு கதவு வழியாக அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை காண்பித்த பின்னரே வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாக்களித்தார்

இந்த தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் முதல் பெயராக மல்லிகார்ஜூன கார்கே பெயர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளது. இரண்டாவது பெயராக சசி தரூர் பெயர் இடம் பெற்றுள்ளது. வாக்குச்சீட்டின் அடியில் எந்த மாநிலம், வாக்காளர் பெயர், வரிசை எண் மற்றும் இடம் ஆகிய விபரங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்தனர். வாக்களிக்க வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயருக்கு நேராக கையெழுத்து போட்ட பின்னரே வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.

மேலும் அனைவருக்கும் கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரகசிய முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் வாக்காளர்கள் டிக் செய்து வாக்குப்பெட்டியில் வாக்குச்சீட்டுகளை போட்டனர். தொடர்ந்து வாக்களித்த பின்னர் மற்றொரு கதவு வழியாக வெளியேறிச் சென்றனர்.

இவ்வாறு இந்த தேர்தல் இன்று மாலை 4 மணிக்கு முடிவடைந்தவுடன், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டியின் மேற்பகுதி சீலிடப்பட்டு, அதில் தேர்தல் அலுவலர்கள் கையொப்பமிட்டு, இன்று இரவே டெல்லிக்கு விமானம் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்த தேர்தலில், பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர் மற்றும் எம்பிக்கள் செல்லக்குமார், விஜய் வசந்த், கார்த்திக் சிதம்பரம் மற்றும் எம்.எல்.ஏக்கள் செல்வபெருந்தகை, பழனி நாடார், அசன் மெளலானா, துரை சந்திரசேகரன், பிரின்ஸ், ராஜேஷ் குமார் மற்றும் எஸ்.ஏ.வாசு, ரங்கபாஷ்யம் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

தொடர்ந்து இந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் 19ஆம் தேதி எண்ணப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

இதையும் படிங்க: அதிமுக சட்டவிதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம் - ஓ. பன்னீர்செல்வம் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.