ETV Bharat / state

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளி நடன ஆசிரியருக்கு அடி உதை! - நடன ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சிறுமியின் உறவினர்கள் நடன ஆசிரியரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

in chennai private school 4 years girl child Sexual harassment Relatives attacked the dance teacher
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடன ஆசிரியர் மீது தாக்குதல்
author img

By

Published : Aug 16, 2023, 12:55 PM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடன ஆசிரியர் மீது தாக்குதல்

சென்னை: பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி, தனக்கு நடன ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறிய நிலையில் பள்ளிக்கு சென்ற பெற்றோர் நடன ஆசிரியரை தாக்கிய வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.

சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிபவர் வேணுகோபால். இவர் அதே பள்ளியில் பயின்று வரும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்தது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இரவு நேரம் என்பதையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் வேணுகோபாலையும் பள்ளிக்கு வரவழைத்து உள்ளனர்.

இதையும் படிங்க: "மாணவர்களிடம் ஜாதி மோதலை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திணிக்கின்றன" - திருமாவளவன் குற்றச்சாட்டு!

பின்னர் பெற்றோரும், உறவினர்களும் சேர்ந்து ஆசிரியரை நடன ஆசிரியர் வேணுகோபாலை பள்ளியில் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் ஆசிரியரை காவல் துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர். பெற்றோர், உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த நடன ஆசிரியர் வேணுகோபாலை, காவல் துறையினர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடன ஆசிரியர் வேணுகோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து உள்ளனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கியதில் ஆசிரியர் வேணுகோபால் காயமடைந்ததால் அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்து உள்ளனர். இந்நிலையில் நடன ஆசிரியர் வேணுகோபாலை சிறுமியின் உறவினர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவத்திற்கு யார் காரணம்? இளஞ்சிறார் குற்றத்திற்கு சினிமா தான் காரணமா? குற்றவியல் துறை கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.