ETV Bharat / state

அதிதீவிரமாகும் 'மோக்கா புயல்' - வங்கக்கடலில் மிகத்தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது

அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள 'மோக்கா புயல்' வடக்கு மற்றும் வடகிழக்குத் திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளதாகவும், இப்புயல் கரையைக் கடக்கும்போது 160 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 12, 2023, 3:46 PM IST

சென்னை: வாட்டி எடுக்கும் கோடையின் நடுவே உருவாகிய மோக்கா புயல் மிகத்தீவிர புயலாக தீவிரமடைந்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே.12) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், 'தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோக்கா” புயலானது நேற்று (11.05.2023) மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்குத் திசையில் நகர்ந்து இன்று (மே.12) காலை 5.30 மணி அளவில் மிகத்தீவிரப் புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு - வடமேற்கே நிலைகொண்டுள்ளது.

இதுவடக்கு - வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று நாளை மறுநாள் நண்பகல், தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையைக் கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனிடையே இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: நாளை முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மேலும் 14, 15 மட்டும் 16ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று காலை முதல் நாளை காலை வரை தென்கிழக்கு வங்ககடலை ஒட்டிய தென்மேற்கு கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.05.2023: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.05.2023: இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.05.2023: தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு அந்தமான் கடல் பகுதிகள்: 12.05.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 13.05.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 மாலை வரை: சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 அன்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 காலை முதல் சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 12.05.2023 மாலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன்பிறகு 13.05.2023 மாலை வரை மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 காலை முதல் 13.05.2023 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 மாலை மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம்படிப்படியாக குறையக்கூடும்.

வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 13.05.2023 முதல் 14.05.2023 நண்பகல் வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.