ETV Bharat / state

அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் அரசுப் பள்ளிகள் அரசப் பள்ளியாக மாறும் -  இறையன்பு

author img

By

Published : Mar 24, 2023, 9:40 PM IST

தமிழ்நாட்டிலிருக்கும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் அரசப் பள்ளிகளாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அரசுப் பணியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுப் பணியாளர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், ”அரசுப் பணியெனும், அரிய வாய்ப்பைப் பெற்ற உடன் பணியாற்றும் தோழர்களே, நம்மில் பலரும் அரசுப் பள்ளிகளிலோ, அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ தடையின்று வளர்ந்தோம். நம்மை அரசுப் பள்ளிகள் கைப்பிடித்து அழைத்துச் சென்று வாழ்க்கையின் நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தன.

இயற்கையை நேசிக்கவும், இருத்தலை ரசிக்கவும், எளியவர்களை மதிக்கவும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தம்மை அறியாமலேயே கற்றுக்கொள்கிறார்கள். அங்கு மனத்தில் மலர் தூவுவதைப்போல கல்வியின் ரசவாதம் நடந்துவிடுகிறது. நாம் விளையாடிக் கொண்டே படித்தோம், பொழுது போக்கைப் போல கல்வி புகட்டப்பட்டது. அன்று கற்றவற்றை இன்றும் மூளை வடிகட்டி வைத்திருக்கிறது.

பள்ளி என்பது வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவை நம் குழந்தைப் பருவத்தின் அழியாத வரி ஓவியங்கள், அந்த நெஞ்சை அகலாத நினைவுகள் நினைக்கும் போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் மனதில் வந்து ஒட்டிக்கொள்ளும். நம் குழந்தைத்தனம் திருடப்படாமல் காப்பாற்றப்பட்டதற்கு நாம் படித்த பள்ளிகளும் ஒரு காரணம்.

நம்மை உருவாக்கிய அரசுப் பள்ளிகளுக்கு கைம்மாறு செய்ய வேண்டியது நம் கடமையாகும். அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒர் இணைய தாழ்வாரத்தின் மூலம் ஒன்றிணைக்கும் முயற்சி உன்னதமான ஒன்றாக இருக்கும் என்று கல்வித்துறை கருதகிறது. மரங்கள் கூட வேர்களில் உதிர்ந்து காணிக்கையாக்குகின்றன. நம்மை ஆளாக்கிய பள்ளிக்கு நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என சிந்திப்பதற்கே இந்த இணைய தாழ்வாரம்.

சொட்டு சொட்டாக விழுந்தால் நீர்த்துளி கூட ஒரு மணி நேரத்தில் நெற்றியில் பாறாங்கல்லாக கனக்கும். ஒவ்வொரு நாளும் நட்டால் ஓராண்டில் காணி நிலம் கூட மரகதப் போர்வைப் போர்த்தி மகிழும். நாம் அனைவரும் கரங்களை இணைத்தால், நம் பள்ளிகள் பளிச்சிட்டு துலங்கும், அங்குக் கட்டிடங்கள் உருவாகும். கலைக் கூடங்கள் மிளிரும், விளையாட்டுத் திடல்கள் கலகலப்புடன் திகழும். பள்ளியின் முகப்பு, நெஞ்சை அள்ளி விழுங்கும் அழகுடன் திகழும்.

கட்டிடங்களுக்காக மட்டுமல்ல இந்தக் கட்டமைப்பு, இது திக்குத் தெரியாமல் தடுமாறும் மாணவர்கள் சிலருக்கு திசை காட்டியாகவும் செயல்படும். அவர்களின் சுண்டு விரலைப் பிடித்து அழைத்துச் செல்லும் ஆள்காட்டி விரலாக இந்த இணைய தாழ்வார அமைப்பு மருவும். பள்ளி மேலாண்மைக் குழு வலுப்படவும், பலப்படவும் இந்த முன்னாள் மாணவர்கள் குழு நேசக்கரம் நீட்டும். தேவைப்படுகிற போது அக்குழுவின் கூட்டத்தில் அவர்கள் ஒப்புதலோடு பங்களிப்பு செய்யும்.

ஆண்டுதோறும் பள்ளிகளில் மாணவர்கள் திறமையை ஒளிரச் செய்ய எத்தனையோ விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் ஆழ்குழாய்க் கிணறு போல செயலாற்றவும் இந்த விழாக்களே அச்சாணிகள். அந்த விழாக்களில் முன்னாள் மாணவர்கள் எந்நாளும் பங்கேற்கலாம். இப்போது படிக்கும் மாணவர்களில் சிலருக்கு பொருளாதாரத்தில் சிக்கல்கள் இருந்தால் அவற்றைக் களைய உதவி புரியலாம்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கப்பட்ட நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் இணையதளத்தில் இதற்கான படிவம் உள்ளது. https://nammaschools.tneschools.gov.in என்ற லிங்கை தொட்டு, பயன்படுத்தி உள்ளே சென்று முன்னாள் மாணவர் பதிவு செய்ய பொத்தானை அழுத்தினால் படிவத்தைப் பெறலாம். அதில் அனைத்துத் தகவல்களையும் தரவேண்டும் என்பதில்லை. நீங்கள் பதிவு செய்ய விரும்பினால் வாட்ஸப்பில், பணியாற்றும் துறை, முகவரி, புகைப்படம், போன்றவற்றை அளிக்கலாம்.

அச்சுட்டியில் நாம் படித்த பள்ளியில் பயின்ற மற்ற மாணவர்களையும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கும் அமைப்பும் உள்ளது. அதைப் பயன்படுத்தி ஒருவர் ஒரே அலை வரிசையில் இருக்கும் வகுப்பு நண்பர்களையும் பள்ளியில் பயின்ற நண்பர்களையும் குழுவில் இணைக்கலாம். முதலில் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், அதில் உள்ள வட்டாரங்களின் பட்டியல் வரும். அதிலிருந்து குறிப்பிட்ட வட்டாரத்தைத் தேர்வு செய்தால் பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் வரும். அதிலிருந்து ஒருவர் தான் பயின்ற பள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம்.

இணையதனத்தில் நம் பள்ளி இப்போது எப்படியிருக்கிறது என்பதை எப்போது வேண்டுமானாலும் காணலாம். நம் பள்ளி முதலில் எப்படியிருந்தது இப்போது நாம் பங்களிப்பு செய்த பிறகு, அதன் மூலம் உருவான திட்டங்களினால் எப்படியிருக்கிறது என்பதை மெய் நிகர் சிற்றுலா மூலமாக உலகின் எந்த மூலையிலிருந்து அனைத்தையும் மந்திரக் கண்ணாடி போலக் காட்டும் திறன்மிகுந்ததாக அந்த இணையதளம் இருக்கிறது. இவ்வெளிப்படைத் தன்மையே இத்திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.

ஒரு மரம் கூட ஆயிரம் விதைகளை மண்ணின் மீது தூவிக் கொண்டேயிருக்கிறது. தொடர்ந்த முயற்சியே உச்சியை அடைவதற்கான உந்து சக்தியாக இருக்கும். நாம் அனைவரும் இணைந்தால் தமிழ்நாட்டிலிருக்கும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் அரசப் பள்ளிகளாக மாறி, கல்வியிலும், கலைகளிலும், திறன்களிலும், அழகிலும், சுற்றுச்சூழலிலும், அமைதியிலும் உலகத்திற்கே ஒளி காட்டும் தீப்பந்தங்களாகத் திகழும். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் இன்று உணர்ந்து கொள்வார்கள் - தொல். திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.