சென்னை பெரம்பூர் அடுத்த திருவள்ளூர் சாலையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் என். கண்ணையாவின் மகன் பிரகாஷ் இல்லத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபடும் போது அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வருமான வரித்துறையினர் செம்பியம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
கண்ணையா கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மநீம பொருளாளர் வீட்டில் 2ஆம் நாளாகத் தொடரும் ஐடி ரெய்டு!