ETV Bharat / state

மக்கள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பார்கள் -தமிழசை நம்பிக்கை - பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

சென்னை: தூத்துக்குடியில் பலமான வேட்பாளராக போட்டியிடுவதால் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்
author img

By

Published : Mar 22, 2019, 7:39 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,

தூத்துக்குடியில் இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது எனது விருப்பமல்ல, மக்களுக்கு சேவை செய்வது தான் எனது விருப்பாமாகும். அதனால் தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். தூத்துக்குடி மக்கள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த தொகுதி மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு உள்ளேன். ஸ்டெர்லைட் விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கு நேரிடையாக தொடர்பு கிடையாது, வேண்டுமென்றே எதிர் கட்சிகள் எங்கள் மீது விமர்சனங்களை வைக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு திமுக தான் காரணம். தற்போது நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு இருப்பதால் இதுப்பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை.மேலும் தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பு தென் மாவட்டம் வளர்ச்சியடைய கிடைத்த வாய்ப்பு ஆகும். இதை நிறைவேற்றுவது தூத்துக்குடி தொகுதி மக்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Intro:Body:

தூத்துக்குடியில் பலமான வேட்பாளராக போட்டியிடுவதால் வெற்றி பெறுவேன் சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி;

தூத்துக்குடியில் 2 பெண் தலைவர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல மக்களுக்கு சேவை செய்வதற்கு காரணமாக இருக்கும். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு உள்ளேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. ஸ்டெர்லைட் விவகாரம் பா.ஜ.க.விற்கு நேரிடையாக தொடர்பு கிடையாது. விமர்சனங்கள் எங்கள் மீது வேண்டுமென்றே வைத்து உள்ளனர். பொதுமக்களின் கருத்துகளுக்கு எதிராக செயல்பட மாட்டோம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பேசவில்லை. 

தூத்துக்குடியில் 9 துப்பாக்கிகளுடன் வக்கீல் கைது செய்யப்பட்டு உள்ளார். தூத்துக்குடி அபாயகரமாக இருப்பதாக நீதிபதியே சொல்லியிருக்கிறார். தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

மத்தியில் மீண்டும் மோடி தான் ஆட்சிக்கு வர போகிறார். மாநிலத்தில் கூட்டணி கட்சி தான் ஆட்சியில் இருக்கும். தூத்துக்குடி மக்களுக்கு என்ன செய்ய முடியமோ அதை விரைவாக செய்ய முடியும். 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் எண்ணமே எங்கள் எண்ணம். ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றிக்கு ஸ்டாலின் தான் கையெழுத்து போட்டார். ஆனால் பா.ஜ.க. எதிரானது போல் பேசுகின்றனர். 

பலமான தலைவர்களை எதிர்த்து போட்டியிட பா.ஜ.க. போட்டியிட வைத்து உள்ளது. என்னை பலிகடா ஆக்கவில்லை. பலமான தலைவராக என்னை களமிருக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலவீனமான தலைவர் போல் கருதகூடாது. 

காங்கிரஸ் கட்சியில் சீட்டிற்காக போட்டி நடக்கிறது. காங்கிரஸ்  வேட்பாளர்கள் பட்டியல் வந்ததும் பிரச்சனைகள் மேலும் அதிகமாகும். 

மத்திய-மாநில அரசுகள் இணைந்து மக்களுக்கு பல திட்டங்களை தந்து உள்ளது. திமுக-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டதா. 

எதிரான கருத்துக்களை சொன்னாலும் யாரையும் எதிரியாக பார்க்க மாட்டோம். 

தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக் கொள்வார்கள். தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது பெருமையாக கருதுகிறேன். தென் மாவட்டம் வளர்ச்சியடைய கிடைத்த வாய்ப்பு.

எல்லா தேர்தலிலும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் சவால் தான். பலத்தின் மீது நம்பிக்கையை வைத்து போட்டியிடுகிறேன். 

அத்வானியை பா.ஜ.க. தொலைத்துவிட்டதாக ஸ்டாலின் சொல்கிறார்

 திமுக தான் வாரிசுகளுக்கு தந்து தொண்டர்களை தொலைத்துவிட்டது. அத்வானிக்கு கட்சி மரியாதை தருகிறது. 90 வயது ஆனதால் கட்சி முடிவு செய்து இருக்கலாம். இதை ஏன் அரசியலாக்குகிறீர்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.