சென்னை: கண்ணகி நகர்ப்பகுதியில் வசித்து வருபவர், ஆட்டோ ஓட்டுநர் டில்லி (23). இவரது மனைவி சரிதா (19). இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டு, தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காதல் மனைவி வேறு ஒருவருடன் செல்போனில் பேசுவதை அறிந்த கணவர் டில்லி பலமுறை சரிதாவை எச்சரித்துள்ளார்.
ஒருமுறை மனைவி சரிதா அவருடைய ஆண் நண்பரிடம் பேசுயதை செல்போனில் தானாக ரெக்கார்ட் ஆகும்படி செய்து அதை காண்பித்து ஒருமுறை மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு தான் பேச மாட்டேன் என்று கூறிய மனைவி தொடர்ந்து அவருடைய ஆண் நண்பரிடம் பேசி வந்துள்ளார்.
கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு இரவு கணவர் தூங்கிவிட்டதாக நினைத்த சரிதா செல்போனில் அவரது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது கணவன் டில்லி ஆத்திரமடைந்து மனைவியை சரமாரியாக அடித்துள்ளார். கண்மூடித்தனமாக மனைவியை அடித்த கணவன் இரவு உறங்கி விட்டு காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி சுயநினைவை இழுந்து இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மனைவியை மீட்டு கண்ணகி நகரிலுள்ள சென்னை மாநகராட்சி மருத்துமனைக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளிக்க முடியாது என கூறிவிட்டனர். பின்னர் உடனடியாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. மூன்று நாள்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சரிதா சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சரிதாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கண்ணகி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து டில்லியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: Video: பெண்ணிடம் தவறாக நடந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்கமாற்றால் அடி