சென்னை: சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுவுள்ள நிலையில் கொடுங் குற்றவாளிகள், ரவுடிகள் ஆகியோர் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன்.
அதன்படி, தமிழ்நாடு காவல் துறை வடக்கு மண்டலம் சார்பில் இன்று (மார்ச் 04) ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 47 ரவுடிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 17 ரவுடிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 9 ரவுடிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ரவுடிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ரவுடிகள் என மொத்தம் 100 ரவுடிகளை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும், பல்வேறு ரவுடிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், பல ரவுடிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் வடக்கு மண்டல ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் டெபாசிட் பணம் செலுத்த பொதுமக்களிடம் மடியேந்திய வேட்பாளர்