ETV Bharat / state

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு - பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

சென்னை : தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில், 3 மாதத்திற்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Humiliation of Periyar statue, HC order to file charge sheet
பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு : குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Feb 7, 2020, 9:14 PM IST

கடந்த 2018ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாளன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உடுமலைச் சாலை, தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையின் மீது சிலர் காலணிகளை வைத்து அவமதிப்பு செய்தனர். சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்தச் செயலில் ஈடுபட்டதாக செங்கல் சேம்பர் உரிமையாளர் நவீன் குமார் என்பவரைக் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்கள் முன்பு கைது செய்யப்பட்ட நவீன் குமாருக்கு பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்வழக்குத் தொடர்பாக, திராவிடர் கழக திருப்பூர் மாவட்டச் செயலாளர் சண்முகம் ஒரு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அம்மனுவில், 'பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா ட்விட்டர் (சுட்டுரை) பதிவில் திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல; தமிழ்நாட்டிலும் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என கருத்து பதிவு செய்திருந்தார்.

இந்தப் பதிவுக்கு பிறகு தான், தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை கோரி, அவரின் தந்தை தாக்கல் செய்த மனுவில் தன்னுடைய மகன் ஒரு மனநோயாளி என்று மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை வழங்கியது. ஆனால், இதுவரை இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கின் நிலை என்ன என்பது குறித்தும் தகவல் ஏதும் இல்லை' என அதில் தெரிவித்திருந்தார்.

Humiliation of Periyar statue, HC order to file charge sheet
பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு : குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு, தாராபுரம் காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க : திரிசூலம் மலையில் திடீர் தீ!

Intro:Body:திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட வழக்கில் 3 மாதத்திற்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைச் சாலை தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையின் மீது காலணிகளை வைத்துச் அவமதிப்பு செய்யபட்டது.

இந்த வழக்கில் செங்கல் சேம்பர் உரிமையாளர் நவீன் குமார் என்பவரை காவல்துறை கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதம் முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் இதுவரை இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என திராவிட கழகத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டர்(சுட்டுரை) பதிவில் திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல தமிழகத்திலும் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என கருத்து பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு பிறகுதான் தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது அதன்பிறகு அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் கோரி அவரின் தந்தை தாக்கல் செய்த மனுவில் தன்னுடைய மகன் ஒரு மனநோயாளி என்று மனுத் தாக்கல் செய்ததன் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கியது

ஆனால், இதுவரை இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு தாராபுரம் காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்துவைத்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.