ETV Bharat / state

'இலங்கையில் எப்படி மக்கள் புரட்சி ஏற்பட்டதோ... அதேபோல் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது'

author img

By

Published : Jun 27, 2022, 3:21 PM IST

'இலங்கையில் எப்படி மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டதோ இந்தியாவிலும் அதுபோன்ற நிலைமை வருவதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது' என்று காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மத்திய மாவட்டத் தலைவர் முத்தழகன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி போராட்டம்
காங்கிரஸ் கட்சி போராட்டம்

சென்னை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள ’அக்னிபத்’ திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று (ஜூன்.27) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகம் முன்பும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக தென் சென்னை மத்திய மாவட்டத் தலைவர் முத்தழகன் தலைமையில் சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த முத்தழகன், "ராணுவம் என்பது அரசியல் தாண்டி நாட்டை காப்பாற்றக் கூடிய ஒன்றாகும். அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்கு முதலில் தேர்வு நடத்தப்பட்டு, நான்கு ஆண்டுகள் பணி அமர்த்தப்படுகிறார்கள். மீண்டும் மற்றொரு தேர்வு வைத்து மீண்டும் குறிப்பிட்ட விழுக்காடு அவர்களை நிரந்தரமாகப் பணி அமர்த்த உள்ளனர். பின்பு எதற்கு முதல் தேர்வு வைக்கிறார்கள்.

இந்த எட்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அனைத்தும் இருந்தது. எனவே, இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி விட்டால் சமூகநீதி இருக்காது.

இலங்கையில் எப்படி மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டதோ இந்தியாவிலும் அதுபோன்ற நிலைமை வருவதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அதைப்பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார். இத்திட்டத்தால் வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே அவர்கள் பணியில் இருப்பார்கள்.

இதே 20 ஆண்டுக்கு மேல் பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தால் நாங்கள் அதை வரவேற்போம். எனவே இத்திட்டம் திரும்பப் பெறும்வரை போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, அக்னிபத் திட்டத்தை எதிர்த்து மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் சத்தியாகிரகப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.

இதையும் படிங்க: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' பஜ்ஜி போடுவதை வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம் - சிதம்பரம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.